பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பு! போதைப்பொருட்களுடன் பலர் கைது
நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கைது நடவடிக்கைககள் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளன.
பொலிஸார் சோதனை
பேலியகொடை பொலிஸ் பிரிவின் நுகேபார பகுதியில் 112 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
மட்டக்குளி பொலிஸ் பிரிவின் கெமுனுபுர பகுதியில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் பொலிஸார் சோதனை மேற்கொண்டபோது 355 கிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு கிலோ 465 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள் மற்றும் 2 கிலோ 30 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது நடவடிக்கைககள்
அத்தோடு, கொத்தட்டுவ பொலிஸ் பிரிவின் கடுகஹவத்த பகுதியில் 10 கிராம் 370 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொத்தட்டுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கடவத்தை பொலிஸ் பிரிவின் கல்வலபார பகுதியில் 7 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவராவார்.
அத்துடன், கல்கிஸை பொலிஸ் பிரிவின் மல்லிகாராம வீதிப் பகுதியில் 10 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.




