ஒட்டிசுட்டானில் புதையல் தோண்ட முற்பட்ட ஆறுபேர் கைது!
முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கனகரத்தினபுரம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு பேரை கைது செய்துள்ளதாக ஒட்டிசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம்(13.05.23) முன்னெடுக்கப்பட்டடுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது, கனகரத்தினபுரம் பேராற்றினை அண்மித்த பகுதியில் தொல்பொருள் திணைக்களத்திற்கு உரித்தான இடத்தில் புதையல் தோண்டப்படுவதாக ஒட்டிசுட்டான் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழு அங்கு புதையல் தோண்ட முற்பட்ட குழுவினை கைது செய்துள்ளனர்.
பொலிஸார் நடவடிக்கை
இதன்போது கனகரத்தினபுரத்தினை சேர்ந்த ஒருவர், மாத்தளையினை சேர்ந்த ஒருவர், கிளிநொச்சியினை சேர்ந்த நால்வர் என ஆறு பேரினையே பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களிமிருந்து புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட சுட்டியல், மண்வெட்டி மற்றும் தொல்பொருள் ஆபரணம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கைதுசெய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது குறித்த சந்தேகநபர்களை (23.05.23) ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |





இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
