ரொட்டவெவ பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவருக்கு கோவிட் தொற்று உறுதி
திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பன்குளம் பிரதேசத்தில் உள்ள விவசாய திணைக்களத்தில் கடமையாற்றி வந்த பெண்ணொருவருக்கு கடந்த வாரம் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவருடன் கடமையாற்றிய இந்த யுவதிக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டபோது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து, யுவதியின் தந்தை மற்றும் தாய் நான்கு சகோதரர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் அன்டிஜன்
பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இவர்களில் சிலரைத் தனிமைப்படுத்தி உள்ளதாகவும், தொடர்ந்தும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல சுகாதார வைத்திய
அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.