முல்லைத்தீவில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட அறுவர் படகுகளுடன் கைது
கொக்குதொடுவாய் கடற்கரை பகுதியில் சட்டவிரோத முறையில் சுருக்குவலை தொழிலில் ஈடுபட்டிருந்த ஐந்து கடற்றொழில் படகு மற்றும் இரண்டு சுருக்குவலைகளுடன் ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்றையதினம் (21.05.2025) இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத தொழில்
முல்லைத்தீவு - கொக்குதொடுவாய் கடற்கரை பகுதியில் சட்டவிரோத கடற்றொழில் இடம்பெறுவதாக கடற்றொழில் திணைக்களத்தினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதற்கமைய, குறித்த இடத்திற்கு சென்ற கடற்றொழில் திணைக்களத்தினர் மற்றும் கடற்படையினர் விரைந்து சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டிருந்த ஐந்து படகுகள், இரண்டு தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளுடன் ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
குறித்த சட்டவிரோத கடற்றொழிலுக்கு வெளிச்சத்தை பாய்ச்சிய படகுகள் பற்றிய விசாரணைகளை கடற்றொழில் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. அத்தோடு கைது செய்யப்பட்ட ஆறுநபர்களும் இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |














பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
