மாவீரர் நாள் தடையுத்தரவிற்கு எதிராக எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் வழக்கு தாக்கல் (Video)
மாவீரர் தின நிகழ்வுகளுக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தடையுத்தரவிற்க்கு எதிராக எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K.Sivajilingam) தலைமையில் மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாளையதினம் குறித்த மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் மீதான விசாரணை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றத்தில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக கிளிநொச்சி காவல்துறையினரால் 51 பேருக்கான தடையுத்தரவு பெறப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், விசுவமடு, முழங்காவில் ஆகிய பகுதிகளில் மாவீரர் துயிலுமில்லங்கள் காணப்படுவதுடன், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்திற்கும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பொலிஸாரினால் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.
குறித்த துயிலுமில்லங்களில் கடந்த 2017 மற்றம் 18ம் ஆண்டுகளில் மாவீரர்நாள் நினைவேந்தல்கள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
