சிவாஜிலிங்கத்தின் உடல் நிலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்
தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
சிவாஜிலிங்கத்தின் உடல் நிலை குறித்து போலியான தகவல்கள் பரவியதை அடுத்தே செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எம் கே சிவாஜிலிங்கம் நேற்று (02.3.2024) ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவசர சிகிச்சைப் பிரிவு
இந்நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிரான வழக்கொன்றின் தீர்ப்புக்காக கடந்த வியாழக்கிழமை அவர் கொழும்பு திரும்பியிருந்தார்.
எனினும், அந்த வழக்கில் நீதிமன்றம் அவரை நிரபராதி என்று தெரிவித்து விடுதலை செய்திருந்தது.
அதனையடுத்து, சென்னை திரும்பிய சிவாஜிலிங்கத்திற்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் வடபழனி விஜயா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
