உக்ரைன் டன்பாஸ் பகுதியை விட்டுக்கொடுத்தால் நேட்டோ உறுப்புரிமை..!
உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு டான்பாஸ் (Donbas) பகுதியிலிருந்து படைகளைத் திரும்பப் பெற்றால், நேட்டோ (NATO) உறுப்புரிமை வழங்குவது குறித்து, அமெரிக்கா முன்மொழிந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தூதர்கள் ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் ரஷ்ய ஜனாதிபதி புடினையும், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் தம்மை சந்தித்த பின்னர், ஜெலன்ஸ்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஐந்தில் ஒரு பகுதி
எனினும், டன்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்க உக்ரைன் தயாராக இல்லை என ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம், உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம், இராணுவக் கட்டுப்பாடுகள் இல்லாமை மற்றும் நாட்டை மீளக் கட்டியெழுப்ப நிதி வழங்கப்பட்டால், இந்த முன்மொழிவை மக்கள் கருத்துக்கணிப்புக்கு விடத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைனின் சுமார் ஐந்தில் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
உக்ரைனின் இராணுவ வலிமையைக் குறைப்பது, பிரதேசங்களை ஒப்படைப்பது மற்றும் நேட்டோவில் இணையாமல் இருப்பது உள்ளிட்ட நிபந்தனைகளை ரஷ்யா முன்வைத்து வருகிறது.
60 மில்லியன் பணத்தை திருப்பி அனுப்பிய யாழ். மாவட்டம் - NPP கையில் சிக்கிய அரசியல்வாதிகளின் கோப்புகள்
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விவகாரம்: வெளிப்படையாக எதிர்ப்பு துவங்கியது News Lankasri
ஹார்முஸ் முடக்கம்... லொறிகளில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முன்னெடுக்கும் மத்திய கிழக்கு நாடு News Lankasri