சென்னையில் அவசர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம் அனுமதி
தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எம் கே சிவாஜிலிங்கம் நேற்று (02.3.2024) ஏற்ப்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் தங்கியிருந்து சிகிச்சை
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவருக்கு எதிரான வழக்கொன்றின் தீர்ப்புக்காக கடந்த வியாழக்கிழமை அவர் கொழும்பு திரும்பியிருந்தார். எனினும் அந்த வழக்கில் நீதிமன்றம் அவரை நிரபராதி என்று தெரிவித்து விடுதலை செய்திருந்தது.
வழக்கு முடிவடைந்து அவர் நேற்று முன்தினம் காலை சென்னைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீரென உடல்நிலை பாதிப்படைந்து அவர் வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், உடல் நலக்குறைவு காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் தங்கியிருந்து சிவாஜிலிங்கம் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தயார் நிலையில் இராணுவம்... ஜனாதிபதிக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் மக்கள் News Lankasri

கடந்த வாரம் பிரவீன் காந்தி, இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து எலிமினேட் ஆனது இவர்தான்... யார் பாருங்க Cineulagam
