ஐந்து மணி நேரம் தாமதித்து நாகையை அடைந்த சிவகங்கை கப்பல்
காங்கேசன்துறையில் இருந்து நேற்று நாகபட்டினம் நோக்கிப் பயணித்த கப்பல் நடுக் கடலில் பழுதடைந்தமையால் பயணிகள் 5 மணி நேரம் தாமதித்தே நாகபட்டினத்தைச் சென்றடைந்துள்ளனர்.
இலங்கை - இந்தியா இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் சேவையான 'சிவகங்கை' கப்பல் நேற்று(08.05.2026) 2.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து 120 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது.
பிற கப்பலின் உதவியுடன்
இந்தக் கப்பல் சர்வதேச எல்லையைத் தாண்டி இந்திய எல்லைக்குள் பயணித்த சமயம் இயந்திரக் கோளாறு காரணமாக கப்பல் நடுக் கடலில் நின்றுள்ளது.

பழுதடைந்து நடுக்கடலில் நின்ற 'சிவகங்கை' கப்பல் பிற கப்பலின் உதவியுடன் கட்டி இழுத்துக் கரைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நாகபட்டினம் இறங்குதுறையை இரவு 11 மணியளவிலேயே கப்பல் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam