ஓமல்பே சோபித்த தேரரின் அதிர்ச்சிக்குரிய அறிவிப்பு! மதப்பயங்கரவாதம் தொடர்பான சம்பவம் ஒன்றின் வெளிப்பாடு..
குருநாகல் மாவட்டத்தில் தும்மலசூரிய, யகம்வெல முஸ்லிம் பள்ளிவாசல் மௌலவி ஒருவர் செய்த பிரசங்கத்தின் கருத்துக்களை கொண்டு மீண்டும் மதப்பயங்கரவாதம் தலைதூக்குவதாக ஓமல்பே சோபித்த தேரர் இன்று ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை வைத்து சர்ச்சையை கிளப்பியுள்ளார். அந்த மாநாட்டில் அவர் குறிப்பிட்ட கருத்துக்கள்,
மதத்தின் போர்வையில் தற்பொழுது உருவாகி வரும் பயங்கரவாத அலையை நிறுத்துவதே இதன் நோக்கமாகும். நாங்கள் பயங்கரவாதத்தினால் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம், அதுவே போதுமானது.
இனிமேலும் மதத்தின் போர்வையில் பயங்கரவாதத்தைப் பரப்ப இடமளிக்க முடியாது. மதங்களின் மூலம் எதிர்பார்க்கப்படும் நாகரிகமான மனித சமூகம் இதுதானா? இந்தச் சம்பவம் இம்மாதம் (12.06.2026) திகதி நடந்ததாகும்.
மௌலவியின் பிரசங்கம்
குறித்த மௌலவியின் உரையில், "எமது மதச் சடங்குகளுக்கு யாராவது எதிர்ப்புத் தெரிவித்தால், எதிராகச் செயல்பட்டால் அவர் கொல்லப்பட வேண்டும்.
எமது மதச் சடங்குகளுக்கு எதிராக ஏதேனும் ஒரு அமைப்போ அல்லது குழுவோ செயல்பட்டால் அவர்கள் கொலை செய்யப்பட வேண்டும்" என்பதாகும்.
நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் விவாதிப்பது மதம் சார்ந்த ஒரு பிரச்சினை பற்றி அல்ல. மதச் சடங்குகள் அல்லது மரபுகள் குறித்த மோதலோ அல்லது விவாதமோ எமக்கில்லை.
மதத்தின் பின்னணியில் மறைந்து கொண்டு செய்யப்படும் பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக மக்கள் கருத்தை உருவாக்குவதையே நாங்கள் எதிர்பாக்கிறோம்.

இது இலங்கைத் தண்டனைச் சட்டக்கோவைக்கு எதிரானதாகும். அதேபோன்று, சர்வதேச உடன்படிக்கைகளுக்கும் எதிரானதாகும்.ஒரு நாகரீக சமூகத்தின் இருப்புக்கே எதிரானதாகும்.
எனவே, நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு, சட்டப்பூர்வமாகச் செயல்படும் அதேவேளையில், இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது இன்றியமையாதது.
ஊடகங்கள் மூலம் இது தொடர்பான உண்மைகளை மக்களுக்குத் தெளிவுபடுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இது மதங்கள் பற்றிய பிரச்சினை அல்ல.
இது சட்டம், ஒழுக்கம் மற்றும் மனிதாபிமானம் பற்றிய பிரச்சினை.எனவே, ஊடகங்கள் இந்த கடமையை நிறைவேற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்.
சஹ்ரான் ஹஷீம் குழுவினரின் சத்தியப்பிரமாண சீசீடிவி காணொளிகள் அழிக்கப்பட்டுள்ளன! பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு