கணிசமான அளவில் அதிகரித்துள்ள வாகனப் பதிவு
இந்த ஆண்டில் வாகனப் பதிவுகளில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூலை மாத இறுதிவரை 133,678 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வாகனப் பதிவு
இவற்றில் மோட்டார் சைக்கிள்கள் 100,451 பதிவுகளுடன் முன்னிலை வகித்ததாகவும், அதைத் தொடர்ந்து 20,535 கார்கள், 3,293 முச்சக்கர வண்டிகள் மற்றும் 1,995 இரட்டைப் பயன்பாட்டு வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மோட்டார் வாகனபோக்குவரத்து திணைக்கள ஆணையர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.
மாதாந்த தரவு நிலையான அதிகரிப்பைக் காட்டுவதுடன், ஜூலை மாதத்தில் மாத்திரம் 37,622 வாகனங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன் வாகன நிதி மற்றும் உரிமை பரிமாற்றங்களிலும் அதிகரிப்பு இருப்பதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் திருவிழா




