வாகனங்களின் விலையில் மீண்டும் ஏற்படவுள்ள மாற்றம்
வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்தால், வரும் மாதங்களில் வாகன இறக்குமதியை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வாகன வரிகள் மற்றும் வாகன கொள்வனவுக்கான கடன் வட்டி விகிதங்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது.
5 ஆண்டுகளின் பின்னர் கடந்த பெப்ரவரி மாதம் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு, வாகன இறக்குமதிக்காக 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் பத்திரங்கள் திறக்கப்பட்டுள்ளது.
கடன் பத்திரங்கள்
இதில், 550 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பத்திரங்களுக்கு ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய தேவை தொடர்ந்தால், அதை நிர்வகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் திட்டத்திற்கமைய, வாகன இறக்குமதியில் கட்டுப்பாடுகளை விதிப்பது கடினம் என்றாலும், இறக்குமதியை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது.
வாகன இறக்குமதி
எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது.
இதுவரை, சுமார் 30,000 வாகனங்கள் தனியார் பயன்பாட்டிற்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.





சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
