அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை(Photos)
சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நிகழ்வு இன்றையதினம் (4.1.2024) யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு
இதில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன்.
மற்றும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் சார்பாகா அரசியல் ஆலோசகர் ஜோதிலிங்கம், வடக்கு மாகாண கடற்றொழில் சமாசம் சார்பாக அ.அன்னராசா, தந்தை செல்வநாயகம் அறக்கட்டளையினர், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஆகியோர் கொண்டிருந்தனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்துப் பிரதிகளை காலக்கிரமத்தில் தயார்படுத்தி, வடக்கிற்கு வருகைதரும் ஜனாதிபதி அவர்களுக்கு நேரில் கையளிக்கப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri

உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள் - செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
