மகிந்த - கோட்டாபய நடத்திய சதி பின்னல்களில் பிள்ளையான் குழு! 70 பேர் ஆயுதங்களுடன்
பிள்ளையான் ஆயுதங்கள் கொண்ட 70 உறுப்பினர்களுடன் அவர்கள் இராணுவத்தினர் அல்ல என்றும் பல சீருடைகளை அணிந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கு தேவையான குற்ற செயற்பாடுகளை செய்ததாகவும் பீல்ட்மார்சல் சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும், இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
பிள்ளையானும் 150 போராளிகளும்
இது தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்த அவர்,
தமிழீழ விடுதலை புலிகளில் இருந்து பிரிந்து வந்த பிள்ளையான் சுங்காவில் பகுதிக்கு வடக்கு பக்கம் இருந்த சிங்கள கிராமத்திற்கு அண்மையில் காட்டில் ஒரு முகாமை அமைத்து கொண்டிருந்தார்.
அங்கு 150 பேர் இருந்தனர். அதில் 80 பேர் 13 வயதுக்கும் குறைந்தவர்கள். அவர்களை நாம் ICRC யிடம் பாரப்படுத்தினோம்.ICRC அந்த சிறுவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்திருக்கும்.மிகுதி 70 பேரும் ஆயுதங்களுடன் இருந்தனர். நாங்கள் அவர்களுக்கு பாதுகாப்பும் வழங்கினோம்.
பின்னர் பிள்ளையான் ராஜபக்சர்களுடன் தான் இருந்தார்.அவர்கள் தான் பிள்ளையானை அரசியலுக்கு கொண்டு வந்தனர். ராஜபக்சர்கள் தான் அவரை கிழக்கு மாகாண முதலமைச்சராக்கினர்.
மேலும் பிள்ளையான் ராஜபக்சர்களுக்கு தேவையானவற்றை கிழக்கில் செய்து கொண்டிருந்தார். அவர்களிடம் ஆயுதங்களும் இருந்தன. அந்த காலத்தில் தான் பிள்ளையான் பல சம்பங்களுடன் தொடர்பு பட்டிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது.
பிள்ளையான் -சஹ்ரான்
அத்தோடு சஹ்ரானுடன் இணைந்திருந்த இராணுவ ஜெனரல்களுடன் பிள்ளையான் தொடர்பில் இருந்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நான் நாடாளுமன்றத்தில் அனைத்து விடயங்களையும் குறிப்பிட்டுள்ளேன். இப்போது அவற்றை சொல்வது என்றால் எனக்கு எதிராக வழக்கு தொடர்வார்கள்.
அதற்காக காலத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. அது தொடர்பில் பெயர் விபரங்களை, நான் குறிப்பிட்டால் அவர்களின் அவமானத்தை துடைப்பதற்கு வழக்கு தாக்கல் செய்யலாம். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சூழ்ச்சி செய்யப்பட்டமை உண்மையாகும்.
புலனாய்வுத் துறையினர் பிரபலமானவர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். இராணுவத்தில் உள்ள ஜெனரல் சிலர் தொடர்புபட்டுள்ளனர். அவர்களில் சிலர் கிழக்குப் பகுதிகளில் கடுமையாற்றி உள்ளனர். சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கவும் குறித்த ஜெனரல்மார்களே சம்பந்தப்பட்டிருந்தனர்.
சஹ்ரான் என்ற பெயரையும் அந்தக் குழுவையும் வளர்த்தவர்கள் அவர்களே. தாக்குதலின் பின்னர் அதற்கான பிரதி பலன்களை அனுபவித்தனர். கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்ற பின்னர் உயர் பதவிகளில் அவர்கள் அமர்த்தப்பட்டனர். நான் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 60 பக்கங்கள் கொண்ட தனி அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளேன்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



