யாழ் சென்ற ரணில்! விசேட அதிரடிப் படையினர் - இராணுவத்தினர் குவிப்பு: தொடரும் கைதுகள் (Video)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அங்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் இன்று (04.01.2024) மாவட்ட செயலகத்திற்கு வருகை தரவுள்ளார். இந்நிலையில் மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அவரின் வருகையை முன்னிட்டு போராட்டத்தில் ஈடுபட முற்பட்ட மூவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்ப்பு நடவடிக்கைகள்
மேலும் இன்று கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்ளவுள்ளதோடு மாலை 7 மணி முதல் 9.30 வரை சிவில் சமூகப் பிரதிநிதிகளை அவர் சந்திக்கவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் வடக்கில் நான்கு நாட்கள் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கக் கோரி யாழ்ப்பாண பொலிஸார் விடுத்திருந்த கோரிக்கையை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் நிராகரித்திருந்த சூழ்நிலையில் கைதுகள் இடம்பெறுகின்மை குறிப்பிடத்தக்கது.