ஆப்கானிஸ்தானில் தொடரும் நிலநடுக்கங்கள்: அச்சத்தில் மக்கள்
ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கம் இன்று (04.1.2024) நள்ளிரவு 1.12 மணியளவில் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலநடுக்கமானது 120 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் அச்சம்
இன்று ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தது வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
எனினும் நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நிலநடுக்கங்கள்
மேலும், நேற்று 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதுடன் நேற்று முன்தினம் அரை மணி நேரத்திற்குள் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கங்கள் முறையே ரிக்டர் அளவில் 4.4 மற்றும் 4.8 ஆக பதிவானமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
