இரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்!
வலஸ்முல்ல பொலிஸ் பிரிவின் உடகஹவத்த பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த குற்றச் சம்பவம் நேற்று (28) இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில், 85 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
உயிரிழந்த பெண், உடகஹவத்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தனியாக வீடொன்றில் வசித்து வரும் குறித்த பெண்ணிற்கு அவரது மகன்,நேற்று இரவு உணவு வழங்கிவிட்டு வெளியேறியுள்ளார்.

இதன் பின்னர், வீட்டிற்குள் நுழைந்த ஒருவர் இந்தக் கொலையை மேற்கொண்டதாக பொலிஸார் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பியோடியுள்ளதாகவும், அவரைக் கைது செய்ய வலஸ்முல்ல பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        