தலைமறைவாகியிருந்த ராஜித தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள மற்றுமொரு உத்தரவு
புதிய இணைப்பு
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு உயர் நீதிமன்றமும் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று காலை உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
நீதிமன்றில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
மேலும், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த மற்றுமொரு வழக்கு தொடர்பான விசாரணைக்காக ராஜித சேனாரத்னவை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ராஜிதவை முன்னிலைப்படுத்தும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தற்போது கொழும்பு உயர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமறைவாகியிருந்தார்.
பிடியாணை..
இந்தநிலையில், இன்றையதினம் குறித்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படும் நிலையிலேயே அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
மேலும், ராஜித சேனாரத்னவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மோசடி வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



