புத்தளத்தில் இடம்பெற்ற கையெழுத்து திரட்டும் நடவடிக்கை(Photos)
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய நேற்று மாலை பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிர்ப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினர் மற்றும் தமிழ் - முஸ்லிம் மக்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
அநுராதபுரம்
இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்று காலை அநுராதபுரத்தில் நடைபெற்றது.
இதில் பௌத்த பிக்குகளும், சிங்கள மக்களும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிப் போராட்டமாகச் சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.














16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
