கந்தளாய் குளத்து பகுதியிலுள்ள காட்டில் கசிப்புத் தொழிற்சாலை முற்றுகை: சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
கந்தளாய் குளத்தை அண்மித்த காட்டுப்பகுதிக்குள் கசிப்பு தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஒன்பது பரல்கள் (பீப்பாய்கள்) மதுபானத்தை கந்தளாய் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
நேற்றைய தினம் (22) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இந்த பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுற்றிவளைப்பு
கந்தளாய் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கந்தளாய் தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி லக்மல் விஜேரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது கைப்பற்றப்பட்ட ஒன்பது மதுபானப் பரல்களில் எட்டு பரல்களில் கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 'கோடா' என்ற மூலப்பொருள் இருந்ததாகவும், ஒவ்வொன்றும் 210 லீட்டர் கொள்ளளவு கொண்டவை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பி ஓடிய சந்தேகநபர்கள்
பொலிஸாரைக் கண்டதும் கசிப்பு தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதாகவும் கந்தளாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan
