கைவிடப்பட்டிருந்த நிலையில் குண்டு துளைக்காத கார் மீட்பு
கொழும்பை - நுகேகொட பகுதியிலுள்ள கராஜ் ஒன்றில் கைவிடப்பட்டிருந்த குண்டு துளைக்காத கார் ஒன்றை மேல் மாகாண குற்றப் பிரிவினர் மீட்டுள்ளனர்.
இது 2008ஆம் ஆண்டில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஜேர்மன் தயாரிப்பான பென்ஸ் ரக கார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகரகத்திடம் அறிக்கை
இலக்கத் தகடு இல்லாத இந்த கார் அதிக எடை காரணமாக சந்தேகிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
விசாரணையில், இது 2008 ஆம் ஆண்டு இந்திய உயர்ஸ்தானிகரகத்தால் இறக்குமதி செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
குறித்த கார் பொலிசாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன் இந்திய உயர்ஸ்தானிகரகத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
இந்தக் கார் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் செய்துள்ள வசூல்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
