பத்மேவுடன் இரகசிய தொடர்பில் பியுமி ஹன்சமாலி...
தற்போது தடுப்புக்காவலில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மேவுடனான உறவு தொடர்பில் மொடல் அழகியான பியூமி ஹன்சமாலியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் (21.10.2025) அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் தனது தனிப்பட்ட பிரச்சினை ஒன்றிற்காக முறைப்பாடு அளிப்பதற்காகவே அங்கு சென்றதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதுஇவ்வாறிருக்க பியூமி ஹன்சமாலி தனது பேஸ்புக் பதிவிலே 4 வருடங்களுக்கு முன்னர் தான் டுபாய்கு சென்றதாகவும் அங்கு கெஹெல்பத்தர பத்மேயின் குடும்ப உறுப்பினர்களுடன் பேச சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் குறிப்பிட்டதோடு, பத்மேவிடமிருந்து எவ்விதமான பணத்தையும் பெறவில்லை எனவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல விடயங்களை ஆராய்கின்றது லங்கா சிறியின் top stories நிகழ்ச்சி....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
