யாழில் நள்ளிரவில் சுற்றிவளைக்கப்பட்ட வீடு : பின்னணியில் முக்கிய புள்ளி
யாழில் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் செயற்பட்ட நபரொருவரின் வீடு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் இருவர் நேற்றையதினம் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் - முலவை சந்தி அருகில் உள்ள வீடொன்றிலேயே இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
விசாரணைகளை முன்னெடுக்க...
யாழ். பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு, பெருமளவான இளைஞர்கள் ஒன்று கூடி பெருமெடுப்பில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அவை தொடர்பிலான காணொளிகள் டிக் ரொக் (tiktok) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டன.
குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது அதிருப்தியை வெளியிட்டு இருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பகிரங்கமாக கோரிக்கை ஒன்றையும் விடுத்திருந்தார்.
இந்நிலையில் குறித்த பகுதியில் தவறான நடவடிக்கை இடம்பெற்றதாக தமக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், முன்னதாக குறித்த கொண்டாட்டங்கள் குறித்து பல தரப்பினரும் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



