தம்மை படுகொலை செய்ய வகுத்துள்ள திட்டம் தொடர்பில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் எழுதிய கடிதம்
நேற்றைய தினம் படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர, உயிர் அச்சுறுத்தல் குறித்து பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பியிருந்தார் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி இந்த கடிதம் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களின் ஊடாக அச்சுறுத்தல்
பல்வேறு பாதாள உலகக் குழுக்களின் ஊடாக தமக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் லசந்த தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெலிகம பிரதேச சபையின் உறுப்பினராக தெரிவாகிய தாம் தற்பொழுது பிரதேச சபையின் தவிசாளராக கடமை ஆற்றி வருவதாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் தமக்கு பல்வேறு தரப்பினர்களிடமிருந்து அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் தவிசாளராக பதவிப்பிரமாணம் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப் போவதில்லை என சிலர் மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்ய திட்டம்
பல்வேறு தரப்பினர் சமூக ஊடகங்களின் ஊடாக தமக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் இது தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்கு தாம் அறிவித்துள்ளதாகவும் இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் தமக்கு அறிவுறுத்தல் வழங்கியதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
உயர் நீதிமன்றத்திற்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் அல்லது பிரதேச சபையில் இருந்து வெளியேறும் சந்தர்ப்பத்தில் தம்மை படுகொலை செய்வதற்கு அவர்கள் முயற்சிப்பதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பிரதான பாதாள உலக குழுக்கள் தமக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும், தம்மை அவர்கள் படுகொலை செய்யப் போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தமக்கு தகவல் கிடைக்கப்பெற்றது எனவும் வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக கடமையாற்றிய லசந்த, பொலிஸ் மா அதிபருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.





6 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் செய்துள்ள வசூல்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
