புளொட்டின் தலைவராக மீண்டும் சித்தார்த்தன் தெரிவு
புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைவராக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி பத்தாவது
பொதுச்சபை கூட்டம் இன்றைய தினம் இணுவில் பகுதியிலுள்ள தனியார் மண்டபமொன்றில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கட்சியின் புதிய நிர்வாக தெரிவுடன், அக்கட்சியின் தலைவராக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நிர்வாக தெரிவு
இதேவேளை,கட்சியின் செயலாளராக நா.இரட்ணலிங்கமும், பொருளாளராக க.சிவநேசனும், ஊடகப் பிரிவின் தலைவராக பா.கஜதீபனும்,சர்வதேச பேச்சாளராக செ.ஜெகநாதனும் தெரிவாகியுள்ளனர்.

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் பொதுச்சபைக் கூட்டத்தில் சர்வதேச நாடுகளில் இயங்குபவர்கள் உட்பட145 பேராளர்கள் வரை கலந்து கொண்டிருந்ததுடன், தீர்மானங்களும் எட்டப்பட்டது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது தேசிய மாநாடு நாளைய தினம்(07)
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் உள்ள ராஜா ஹம்சிகா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri