மண்டையன் குழுவும் செம்மணிக்கு பதில் சொல்ல வேண்டுமா!
சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் யாழ். மாவட்டத்தில் இயங்கிய மண்டையன்குழு தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் இன்றுவரை தமிழர்களிடையே ஆங்காங்கே வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமக்கான உரிமைபோராட்டத்தில் சிறிலங்கா இராணுவத்துக்கு எதிராக போடாடிய சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கிய பிரமுகராக விளங்கிய சுரேஸ் பிரேமச்சந்திரன் (ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன்) இந்தியப் படையின் பாதுகாப்புடன் பல தாக்குதல் நகர்வுகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கடந்த காலத்தில் வெளியாகிய செய்திகள், இதற்கு இந்திய இராணுவம் ஆதரவு வழங்கியதை மேற்கோள் காட்டுகின்றன.
யாழ்ப்பாண நகர வர்த்தக நிலையங்களில் பணம் வசூலித்தல், தமிழீழ விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிப்போரை அல்லது அவர்களது ஆதரவாளர்கள் எனச் சந்தேகிப்போரை சுட்டுக்கொலை செய்தல் என யாழ்ப்பாண மக்களை பீதிக்குள்ளாக்கும் செயல்களில் இந்த குழு ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த பின்னணியில் வடக்கில் இலங்கை இராணுவத்தால் அறங்கேரிய படுகொலைகள், மற்றும் இனவெறி தாக்குதல்கள் போன்றவற்றுக்கு இது வரை நீதிக்கிடைக்காத நகர்வில் மண்டையன் குழுவும் இதற்கு பொறுப்புக்கூறவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
அவ்வாறெனில் வடக்கில் செம்மணி போன்ற மனித அவலத்தின் அடையாளங்கள் வெளிப்படுத்தும் உண்மைகள் தொடர்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் தரப்புக்கு தெரிந்திருக்குமா? அவ்வாறு தெரிந்திருந்தால் அது மூடி மறைக்கப்படுகிறதா? அவ்வாறென்றால் இன்று தமிழ் மக்களுக்காக சுரேஸ் பிரேமச்சந்திரன் தரப்பு குரல் கொடுக்க காரணம் என்ன?
இவ்வாறான கேள்விகளுக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறிய பதில்களை தொகுத்து வருகிறது தொடரும் காணொளி...



