மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சி
எதிர்வரும் வெள்ளிக்கிழமை(15) இலங்கை தமிழரசுக் கட்சியினால் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு வடக்கு, கிழக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் புதன்கிழமை(13) மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் ஆதரவு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று(11) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தமிழ் இளைஞன் படுகொலை
மேலும் கருத்து தெரிவித்த அவர், ஒரு சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சில இளைஞர்கள் 66-ஆம் பிரிவு இராணுவ முகாமுக்குள் சென்றதாகவும் அந்த இடத்தில் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் ஒரு சில நாட்களுக்கு முன்னர் செய்தியில் வந்திருந்தது.
அந்த செய்தியை பார்த்தபோது உடனடியாக நாங்களும் இது சம்பந்தமாக சர்வதேச சமூகமும் அதே போன்று வெளிநாடு தூதுவர்கள் அனைவரிடமும் ஒரு அவசரமான ஒரு விடயமாக பார்க்க வேண்டும் என்பதனை அறிவித்திருந்தோம்.
அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நாங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் முத்தையன் கட்டு குளத்தில் இருந்து ஒரு இளைஞருடைய சடலம் மீட்கப்பட்டதாக செய்திகளில் அவதானிக்க கூடியதாக இருந்தது.
போராட்டத்திற்கு அழைப்பு
இதில் ஒரு அபாயமான நிலை இராணுவத்தினால் தமிழ் இளைஞர்களை அடித்து கொலை செய்யும் அளவிற்கு 2025 ஆம் ஆண்டிலும் இருக்கின்றது ஒரு பாரதூரமான ஒரு விடயம்.
இந்த பாரதூரமான விடயத்தை அதனோடு சேர்த்து இன்னும் பல விடயங்கள் இருக்கின்றது. ஆனால் மிக முக்கியமாக இந்த பாரதூரமான விடயத்தை கண்டித்து இது சம்பந்தமாக உலக நாடுகளுக்கு இதனைக் கொண்டு செல்லும் முகமாக எதிர்வரும் 15 ஆம் திகதி ஒரு ஹர்த்தால் போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருக்கின்றது.
இந்த ஹர்த்தால் போராட்டத்தை வடக்கு கிழக்கு பூராகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கான அழைப்புகள் நாங்கள் விடுத்திருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

விஜய்யின் ‘குஷி’ ரீரிலீஸ் தியேட்டர் எல்லாம் காத்து வாங்குதா.. பிரபல தியேட்டர் உரிமையாளர் ட்ரோலுக்கு பதில் Cineulagam
