செங்கலடி பொதுச் சந்தையில் கடைகள் உடைத்து திருட்டு : பொலிஸார் விசாரணை
மட்டக்களப்பு செங்கலடி பொதுச் சந்தையில் நள்ளிரவில் கடைகள் உடைக்கப்பட்டு பணம் உட்பட பொருட்கள் திருடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (20) இரவு 11.40 மணியளவில் செங்கலடி பொதுச் சந்தைக்குள் நுழைந்த திருடர்கள் மூன்று கடைகளை உடைத்து அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
மர்ம நபர்களின் நடமாட்டம்
திருட்டில் ஈடுபடும் திருடன் ஒருவனின் காணொளி வியாபார நிலையங்களில் உள்ள CCTV கேமராக்களில் பதிவாகி உள்ளது.
இரவு சுமார் 11.40 மணியளவில் இரும்பு ஆயுதம் ஒன்றால் அடித்து மூன்று கடைகள் உடைக்கப்படும் போது பிரதேச சபையினால் நியமிக்கப்பட்ட இரண்டு காவலாளிகளும் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
குறித்த சந்தைப் பகுதி மிகவும் இருள் சூழ்ந்த நிலையில் காணப்படுவதால் அங்கு இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்திருந்த நிலையில் இவ்வாறான திருட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதால். செங்கலடி சந்தை பகுதியில் உள்ள வியாபார நிலையங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






