மு.க.ஸ்டாலின் உடல் நிலை குறித்து வெளியான தகவல்
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மூன்று நாட்கள் ஓய்வில் இருப்பது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
சென்னையின் அப்பலோ மருத்துவமனையில் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மூன்று நாட்களுக்கு ஓய்வில் இருப்பது
72 வயதான முதல்வரும், திராவிட முன்னேற்றக்கழகத் தலைவருமான ஸ்டாலின், தினமும் காலையில் மேற்கொள்ளும் நடைபயிற்சியில் நேற்று சுகயீனமடைந்தார்.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனினும் அவரின் சுகயீனத்துக்கான காரணத்தை மருத்துவமனை அறிவிக்கவில்லை.
மாறாக, மூன்று நாட்களுக்கு அவர் ஓய்வில் இருப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திரமோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட்டவர்கள் அவரின் நலம் குறித்து விசாரித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
