யாழ். வணிகர் கழக பிரதிநிதிகளிடம் மாவீரர் தினம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர்களுக்கும், யாழ். வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
எழுத்துமூல கோரிக்கை..
இதன்போது, நாளையதினம், யாழில் உள்ள வர்த்தக நிலையங்களை மாலை 2.00 மணியுடன் மூடுமாறு யாழ். மாநகரசபை உறுப்பினர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

"எமது மண்ணுக்காய் மரணித்த வீரர்களின் தினமான மாவீரர் தினத்தன்று, யாழில் உள்ள வர்த்தக நிலையங்களை மாலை 2.00 மணியுடன் பூட்டி உரிமையாளர் ஊழியர்கள் மாவீரர் நிகழ்வில் பங்கு பற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்" என்று எழுத்துமூலமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, யாழ். வணிகர் கழக பிரதிநிதிகள், அது குறித்து சாதகமாக பரிசீலிப்பதாக வாக்குறுதி தந்திருப்பதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் இரத்தினம் சதீஸ் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |