நுவரெலியாவில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை
நுவரெலியா - லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வளாக ஜனபத்திய பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்று உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்று (17.03.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
முறைப்பாடு பதிவு
வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் இன்றையதினம் (18) காலை வர்த்தக நிலையத்திற்கு வந்தபோது குறித்த வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டமை தெரியவந்ததுடன் சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யதுள்ளார்.
இந்நிலையில், மேல்மாடி ஊடாக இரண்டாவது நுழைவாயில் கதவின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 80, 675 ரூபாய் பணமும் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் மற்றும் சிகரெட் பெட்டிகளையும் கொள்ளையிடப்பட்டதாக உரிமையாளர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நுவரெலியா தடயவியல் பொலிஸாரோடு இணைந்து லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பதினாறாவது மே பதினெட்டு 19 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
