சிறைச்சாலை அதிகாரியின் வீட்டின் முன்னால் வைக்கப்பட்ட மலர்வளையம்
காலி சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் வீட்டிற்கு முன்னால் மலர் வடம் மற்றும் மெழுகுவர்த்தி ஒன்றை வைத்துச் சென்றுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று (18) காலை பதிவாகியுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சிறைச்சாலை அதிகாரி காலி சிறைச்சாலையின் ஒழுக்காற்றுப் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கை
காலி சிறைச்சாலைக்கு வெளியே இருந்த வீசப்படும் பொதிகளில் இருந்து 13 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புகையிலையை குறித்த அதிகாரி கண்டுபிடித்துள்ளதாகவும், நேற்று மாலையும் வெளியில் இருந்து வீசப்பட்ட பொதி ஒன்றை இந்த அதிகாரி கண்டு பிடித்துள்ளார்.
இதன்போது, கைதி ஒருவர் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அது தொடர்பில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த அதிகாரியின் பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri