மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
மத்திய வங்கி நிர்வாகம் ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை குறிப்பிட்ட வீதத்தால் குறைப்பது தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக மத்திய வங்கியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், அதற்கு மத்திய வங்கியின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இன்று (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
கடும் எதிர்ப்பு
இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் 70% அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் பல தரப்பினரிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் மத்திய வங்கியின் தலைவர் அமைச்சரவைக்கும், நாடாளுமன்றத்தின் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கும் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |