யாழில் திடீர் சுற்றிவளைப்பு - பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை
காலாவதியான பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி (Food city) ஒன்றின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடையின் உரிமையாளருக்கு யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றால் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், திருநெல்வேலி பகுதியில் உள்ள இரண்டு பல்பொருள் அங்காடிகளில் பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
காலாவதியான பொருட்கள் விற்பனை
அதன் போது, காலாவதியான பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியமை, வண்டுகள் மொய்த்த பழுதடைந்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மீட்கப்பட்ட பொருட்களை சான்று பொருட்களாக மன்றில் முற்படுத்திய சுகாதார பரிசோதகர் அங்காடி உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
குறித்த வழக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை மன்றில் அழைக்கப்பட்ட போது ஒருவர் மன்றில் முன்னிலையாகத நிலையில் , மன்றில் முன்னிலையான ஒரு அங்காடி உரிமையாளருக்கு எதிராக 18 குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.
தன் மீதான குற்றச்சாட்டுக்களை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை கடுமையாக எச்சரித்த மன்று அவருக்கு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri
