யாழ்.ஏழாலையில் கத்திக்குத்துக்கு இலக்காகி கடை உரிமையாளர் உயிரிழப்பு
சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் வாணிப நிலையத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகி கடை உரிமையாளர் மரணமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, ஏழாலை கிழக்கு பகுதியில் காணப்பட்ட வாணிப நிலையத்திற்கு மது போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் மிக்சர் தருமாறு கேட்டுள்ளார்கள்.
அப்போது கடை உரிமையாளர் மிக்சருக்குரிய பணத்தை தருமாறு கேட்டபோது மிக்சரை வாங்க வந்தவர்களுக்கும் கடை உரிமையாளர்களுடைய வாய்ததர்க்கம் ஏற்பட்டது.
உயிரிழப்பு
இதன்போது கடை உரிமையாளர் மீது மிக்சர் வாங்க வந்தவர்கள் கத்திக்குத்தை மேற்கொண்டுண்ட போது கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் ஏழாலை கிழக்கு பகுதியை சேர்ந்த சிங்காராவேல் தானவன் வயது 35 என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சனலம் தற்போது தொல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுளளது .
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் சுண்ணாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 12 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri
