லஞ்ச ஊழல் தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் ஆளும் கட்சி அமைச்சர் குமார ஜயகொடி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2015ம் ஆண்டில் இரசாயன உர கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி சம்பவம் தொடர்பில் விளக்கம் அளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி கோரியுள்ளார்.
தெற்கு ஊடகமொன்று இந்த விடயங்கள் தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவரின் ஊடாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் தேவையென்றால் எழுத்து மூலம் விளக்கமளிக்க முடியும் என ஆணைக்குழு அமைச்சருக்கு அறிவித்துள்ளது.
இந்த புதிய கோரிக்கை காரணமாக அமைச்சருக்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு வழக்கு தொடரும் நடவடிக்கை மேலும் தாமதமாகக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக, நிதி மோசடி தொடர்பில் அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் இருவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் சட்ட நவடடிக்கை எடுக்க லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆணைக்குழுவின் தலைவர் ரங்க திஸாநாயக்க இந்த அனுமதியை வழங்கியிருந்தார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 12 மணி நேரம் முன்

619 விக்கெட் வீழ்த்திய ஜாம்பவானின் சாதனையை முறியடித்த ஜடேஜா! சச்சின், கோஹ்லியும் கூட இல்லை News Lankasri

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri
