யால தேசிய பூங்காவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
யால தேசிய பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட விசேட வனவிலங்கு நடவடிக்கையின் போது வேட்டைக்காரர்களுக்கும் வனவிலங்கு அதிகாரிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லுணுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை நேற்று (11) தனமல்வில யால தேசிய பூங்கா தலைமையக அலுவலகத்தைச் சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் குழுவினால் வனப்பகுதிக்குள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
பூங்காவிற்குள் விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்த மூவரைக் கைது செய்ய முயன்றபோதே, வேட்டைக்காரர்கள் வனவிலங்கு அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதற்கு பதிலடியாக அதிகாரிகளும் தற்காப்பிற்காக மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டின் போது சந்தேகநபர்கள் இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில், எல்லகல இடதுகரை, திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவரை வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து இரு மான்களின் 41 கிலோகிராம் இறைச்சி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் வனவிலங்கு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்த மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் தொழிலதிபரின் வீட்டில் காதலர்கள் செய்த பெரும் பணமோசடி! சிசிடிவி காட்சிகளில் சிக்கிய ஆதாரம்
YOU MAY LIKE THIS VIDEO