நீர்கொழும்பில் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு! இருவர் தப்பியோட்டம்
நீர்கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞர்,
வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இன்று (12) முற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் குறித்த இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம்
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட இரண்டு நபர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
நீர்கொழும்பு – துன்கல்பிடிய பகுதியில் உள்ள மீன் பிடிக்கும் இடத்துக்கான பிரவேச பற்றுச்சீட்டை விநியோகிக்கும் 25 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்றும்,
சந்தேகநபர்களைத் தேடி நீர்கொழும்பு பொலிஸாரால் விசாரணைகள்
முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
நீர்கொழும்பு - லெல்லம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (12.08.2023) இடம்பெற்றுள்ளது.
ஒருவர் வைத்தியசாலையில்
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், குறித்த நபர் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர் என்று நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், நீர்கொழும்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |