ட்ரம்பின் அடுத்த இலக்கு : சிக்கலில் பல உலக நாடுகள்
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது புதிய வெளியுறவுக் கொள்கையான "டொன்ரோ கோட்பாடு" (Donroe Doctrine) என்பதன் கீழ் பல நாடுகளைத் தனது அடுத்த இலக்குகளாக அடையாளப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, கிரீன்லாந்து தீவு முழுவதையும் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர விரும்புவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அங்கு ரஷ்ய, சீனக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்த
இங்கு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இராணுவத் தளவாடங்களுக்குத் தேவையான அரிய மண் தாதுக்கள் அதிகளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆண்டுகளில் துருவப் பனிக்கட்டிகள் உருகுவதால், புதிய கப்பல் பாதைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரீன்லாந்தின் பிரதமர் ஜென்ஸ் பிரெட்ரிக் நீல்சன், தீவின் மீதான அமெரிக்க கட்டுப்பாட்டின் கருத்தை ஒரு " கற்பனை " என்று விவரித்து ட்ரம்பிற்கு பதிலளித்துள்ளார்.
வெனிசுவேலா நடவடிக்கைக்குப் பிறகு, கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவை எச்சரித்துள்ள ட்ரம்ப், அந்நாட்டின் மீதான இராணுவ நடவடிக்கைக்கும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கொலம்பியா ஒரு "நோயுற்ற மனிதனால்" வழிநடத்தப்படுவதாகவும், அங்கிருந்து அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கியூபா பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைய
ஈரானில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ட்ரம்ப், போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால் அமெரிக்கா "மிகக் கடுமையாகத் தாக்கும்" என எச்சரித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

மெக்சிக்கோ எல்லை வழியாக போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகையைத் தடுக்க மெக்சிக்கோ போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என ட்ரம்ப் சாடியுள்ளார்.
2025 ஆம் ஆண்டு பதவியேற்ற முதல் நாளன்று மெக்சிக்கோ வளைகுடாவை, அமெரிக்க வளைகுடா எனப் பெயர் மாற்றுவதற்கான நிறைவேற்று ஆணையில் அவர் கையெழுத்திட்டார்.
வெனிசுவேலாவின் மதுரோ ஆட்சி கவிழ்ந்ததால், அங்கிருந்து கியூபாவிற்கு கிடைத்து வந்த எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
கியூபா பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடையத் தயாராக உள்ளதாகவும், அங்கு இராணுவத் தலையீடு தேவையில்லை, தானாகவே வீழ்ந்துவிடும் என்றும் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam