சஜித்திற்கு அதிர்ச்சி கொடுக்கும் தகவல்: எதிராக திரும்பியுள்ள உறுப்பினர்கள் - செய்திகளின் தொகுப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டின் பொறுப்பை ஏற்க சஜித் பிரேமதாச தயங்கி வருவதாகவும் இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்திக்குள் அவருக்கு எதிரான நிலைப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், “புயல் வீசும் கடலில் கப்பலைச் செலுத்த அஞ்சும் நபர் கப்பலின் மாலுமி பதவிக்கு மட்டுமல்ல கப்பலைக் கூட்டிப் பெருக்கி துப்பரவு செய்யவும் தகுதியற்றவர்” என முன்னாள் அமைச்சர் கருணாரத்ன பரணவித்தான தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam