பௌத்த தேரர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
கடந்த 2018 இல் இருந்து 2022 வரைக்கும் சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான வழக்குகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பல பகுதிகளில் போராட்டங்கள்
நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக பௌத்த தேரர்களினால் நடைபெறும் பாலியல் ரீதியான அநீதிகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

அண்மையில் அநுராதபுரம் எட்டு புண்ணிதலங்களின் (அடமஸ்தானய) விகாராதிபதி சிறுமியொருவரை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிராக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எழுந்துள்ள கண்டனங்கள்
இந்நிலையில், பௌத்த தேரர்களை சட்டத்தின் பிடியில் இருந்து பாதுகாக்கும் வகையில் அவர்களுக்குத் தனியான நீதிமன்றக்கட்டமைப்பொன்றை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கு எதிராக தற்போது பல்வேறு சமயத் தலைவர்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
YOU MAY LIKE THIS VIDEO