சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
பொலிஸ்துறையின், சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களினபடி, கடந்த அக்டோபர் மாதத்தில் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் அதிர்ச்சியூட்டும் அதிகரிப்பை கொண்டுள்ளன.
அறிக்கையின்படி, இந்த காலகட்டத்தில் 16 வயதுக்குட்பட்ட மொத்தம் 131 சிறுமிகள் உடல் ரீதியான வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.
புள்ளிவிபரம்
ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பொலிஸ்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர, இந்த தகவல்களை வெளியிட்டார்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் தற்போது கர்ப்பமாக உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக கடந்த செப்டம்பரில், பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க வெளியிட்ட தகவலில், அந்த மாதத்திற்குள் மட்டும் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் தகாத முறையில் வழிநடத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இவற்றில் 22 குழந்தைகள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார் .




