ஷிரந்திக்கு மீண்டும் சிறை! வெளியான உத்தரவு

Supreme Court of Sri Lanka Shiranthi Rajapaksa Colombo Hospital Department of Prisons Sri Lanka
By Dhayani Oct 13, 2026 09:32 AM GMT
Report

புதிய இணைப்பு

முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி எதிர்வரும் 16ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு  நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அன்றையதினம், ஷிரந்தி ராஜபக்ச தொடர்பான மேலதிக மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவுப் பிறப்பித்துள்ளார். 

 இரண்டாம் இணைப்பு - 11:22AM(SL/Time)

முன்னாள் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவுக்கு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப்பிரிவில், அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.  

ஷிரந்தி ராஜபக்ச மீதான வழக்கு, இன்று (13) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.  

ஷிரந்தி ராஜபக்சவிற்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, சிறையில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஷிரந்தி ராஜபக்ச நேற்று (12) கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள வழக்கு

மேலும், அவர் தற்போது திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஷிரந்திக்கு மீண்டும் சிறை! வெளியான உத்தரவு | Shiranthi Rajapaksa Produced Before Court Today

இதன்போது அரச தரப்புக்காக முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ், சந்தேகநபர் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது உண்மை தான் என்றாலும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவது குறித்து சிறை அதிகாரிகளுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.


அதன்படி, நீதிமன்றத்தில் சிறை அதிகாரிகளிடம் உரையாற்றிய தலைமை நீதிபதி, ஷிரந்தி ராஜபக்சவுக்கு இன்று திறந்த இதய அறுவை சிகிச்சை நடைபெறுகிறதா என்பதை உடனடியாக விசாரித்து தமக்கு தெரிவிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சம்பந்தப்பட்ட அறிக்கை கிடைக்கும் வரை, இந்த வழக்கு இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முதலாம் இணைப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்றுவரும் ஷிரந்தி ராஜபக்ச, இன்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளார்.

அரச வங்கியிலிருந்து பெறப்பட்ட ரூ. 10 மில்லியனை முறைகேடாக பயன்படுத்திய ஊழல் மற்றும் பொதுச் சொத்துச்சட்டத்தின் கீழ் உள்ள குற்றச்சாட்டுகளின் பேரில், ஷிரந்தி ராஜபக்ச 7ஆம் திகதி கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வைத்திய அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தல்

இதனையடுத்து சிறைச்சாலை வைத்தியர்களின் வைத்திய பரிந்துரைகளின் அடிப்படையில், அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் செனக பல்லத்தன்ன தெரிவித்துள்ளார்.

ஷிரந்திக்கு மீண்டும் சிறை! வெளியான உத்தரவு | Shiranthi Rajapaksa Produced Before Court Today

வைத்தியர்களின் ஆலோசனைக்கமைய ஷிரந்தி ராஜபக்சவை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த முடியாவிட்டால், அது தொடர்பான வைத்திய அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும்    ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், சம்பவம் தொடர்பாக தான் கைது செய்யப்படும் பட்சத்தில், முன்பிணையில் தன்னை விடுவிக்க உத்தரவிடக்கோரி ஷிரந்தி ராஜபக்ச தாக்கல் செய்திருந்த முன்பிணை மனுவை நீதவான் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகிந்தவின் தற்போதைய நிலை..! வெளியான அறிவிப்பு

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகிந்தவின் தற்போதைய நிலை..! வெளியான அறிவிப்பு

  

ஷிரந்தி ராஜபக்சவின் சிறைவாசத்தை சுற்றியுள்ள அரசியல் சர்ச்சை! சிக்கிய வாக்குமூலங்கள்

ஷிரந்தி ராஜபக்சவின் சிறைவாசத்தை சுற்றியுள்ள அரசியல் சர்ச்சை! சிக்கிய வாக்குமூலங்கள்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US