நிகழ்வொன்றிற்கு பிரதம விருந்தினராக சென்ற ஷிரந்தி ராஜபக்ச! சமூக வலைத்தளங்களில் எழுந்த சர்ச்சை (PHOTOS)
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் பிரதம விருந்தினராக பங்கேற்றுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நிகழ்வினை பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்ததுடன், அதில்,பெண்கள் பலரும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஷிரந்தி ராஜபக்ச அழைக்கப்பட்டமைக்கு, சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அலையென திரண்ட மக்கள் கூட்டம்: விண்ணதிரும் கோஷங்களுடன் காலிமுகத்திடலில் தொடரும் போராட்டம் (PHOTOS) |
பெண்களை கௌரவிக்க ஷிரந்தி ராஜபக்சவை விட சிறந்த விருந்தினரை பெண் வழக்கறிஞர்கள் சங்கம் கண்டுபிடிக்க முடியவில்லையா? பெண் வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினர்கள் மக்கள் போராட்டத்திற்கு இவ்வளவு தொனியில் காது கேளாதவர்களா? என்றெல்லாம் பொது மக்கள் கேள்விகளை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிகழ்வில் நீதியமைச்சர் அலி சப்ரி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சியும் பங்கேற்றிருந்தனர்.




