அலையென திரண்ட மக்கள் கூட்டம்: விண்ணதிரும் கோஷங்களுடன் காலிமுகத்திடலில் தொடரும் போராட்டம் (PHOTOS)
அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் கடந்த 29 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பலர் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பெருந்திரளானவர்கள் திரண்டு அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதன்போது போராட்டக்காரர்கள் ‘கோட்டா கோ ஹோம்’‘GoHomeGotta’ என கோஷங்களை எழுப்பிவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம் (Photos) |
இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் கிளர்ந்தெழுந்து அரசாங்கத்திற்கு எதிராக பல பகுதிகளில் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இலங்கையில் பொது அவசரகாலச் சட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அவசரக் காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








