பரபரப்பான சூழ்நிலையில் இலங்கையில் இருந்து வெளியேறிய மகிந்தவின் மனைவி ஷிரந்தி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களாக உடல்நல குறைவாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நிதிக் குற்றங்கள்
இந்நிலையில் உறவினர் ஒருவருடன் ஷிரந்தி ராஜபக்ச சென்றுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இருவரும் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் SQ469 என்ற விமானத்தில், அதிகாலை சுமார் 1.10 மணியளவில் சிங்கப்பூருக்கு புறப்பட்டனர்.
எதிர்வரும் நாட்களில் நிதிக்குற்றங்கள் தொடர்பான விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்ச அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.