மகிந்த குடும்பத்திற்கு தொடரும் சிக்கல்! நாமல் - ஷிரந்திக்கு அழைப்பாணை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
எதிர்வரும் 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அழைப்பாணை
சிரிலிய சவிய திட்டம் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஷிரந்தி ராஜபக்ச அழைக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த விசாரணைக்காக வாக்குமூலம் பதிவு செய்ய வருமாறு முன்னர் அவருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் வர முடியாது என்று கூறி அவர் வேறு திகதியைக் கோரியிருந்தார். அதன்படி 3 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அதே நாளில் காலை 9.30 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அவருக்கு எதிரான முறைப்பாடு குறித்து அவருக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று அறியப்படுகின்றது.