மகிந்தவுக்கு பதிலாக கைது செய்யப்பட்ட ஷிரந்தி! கை விலங்கோடு மக்களிடம் காட்சிப்படுத்த தீர்மானம் - வலுக்கும் எதிர்ப்பு
மகிந்த ராஜபக்சவைக் கைது செய்தால் அரசியல் ரீதியாக தங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்பதை நன்கு அறிந்த அரசாங்கம், அவருடைய மனைவி ஷிரந்தி ராஜபக்சவை கைது செய்துள்ளது. அவரை கை விலங்கோடு மக்களிடம் காட்சிப்படுத்தும் தீர்மானத்தில் இந்த அரசாங்கம் இறங்கியிருக்கின்றது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுப் பெற்ற புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளிட்ட பிரிவினைவாத குழுக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே இவை அனைத்தையும் மேற்கொள்கின்றது.
மகிந்தவுக்கு மன வேதனை
கைது செய்யப்பட்டதன் ஊடாக இலக்கானவர் ஷிரந்தி ராஜபக்ச மட்டும் அல்ல, மகிந்த ராஜபக்சவின் அரசியல் பிம்பமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
ஒருவரின் மனைவி கைது செய்யப்படும்போது, ஒரு கணவருக்கு ஏற்படும் மன வேதனையும் உணர்வுபூர்வமான பாதிப்பும் அவருடைய இளைய மகன் கைது செய்யப்படும் போது ஏற்படுவதை விட அதிகமானதாகும். இதுவே உண்மையானது.

தமிழ் புலம்பெயர் அமைப்புக்களைத் திருப்திப்படுத்துவதற்காக மகிந்த ராஜபக்சவை கைது செய்ய முயன்றால், இந்த நாட்டில் ஏற்படக் கூடிய அரசியல் அலை தங்களையும் பாதிக்கும் என்பதை இந்த அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது.
எனவேதான், மகிந்தவைக் கைது செய்ய முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் ஷிரந்தி ராஜபக்சவையாவது கைது செய்து காட்டுவோம் என்ற எண்ணத்தில் தற்போது இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
ஷிரந்தி ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, நவலோக மருத்துவமனையில் வழக்கமாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார். அதற்கு தேவையான மருத்துவ அறிக்கைகளையும் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
கை விலங்கோடு ஷிரந்தி
எனினும், ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் விருப்பம் அதற்கு மாறாக இருந்ததால், நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்த சிறைச்சாலை அதிகாரிகள் அவரை நவலோக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவில்லை.
மாறாக, சிசைறச்சாலை மருத்துவர்களிடம் அவரை பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், மறுதினம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

நீதிமன்ற உத்தரவு இல்லாத சந்தர்ப்பங்களில் அதிகாரிகள் தங்களுக்கு ஏற்ற நடைமுறைகளின்படி செயற்பட முடியும். ஆனால் நீதிமன்றம் குறிப்பிட்ட உத்தரவைப் பிறப்பித்திருக்கும்போது, அதனைப் பின்பற்ற வேண்டியது அவசியமானது.
இந்த நாட்டின் ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் விருப்பம் என்னவென்றால், ஷிரந்தி ராஜபக்சவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, அவரது கைகளில் கைவிலங்குகளைப் பூட்டி, மக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்த வேண்டும்.
இந்த நாட்டின் மிகப்பெரியத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் மனைவியை நாங்கள் கை விலங்கிட்டு அழைத்து வந்திருக்கின்றோம் என்று மக்களுக்குக் காட்ட வேண்டும் என்ற அரசியல் நோக்கத்துடனேயே இவ்வாறு அரசாங்கம் செயற்படுகின்றது.
குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு உடல்நலப் பாதிப்புக்களால் அவதியுறும் ஷிரந்தி! நாட்டுக்கு சேவை செய்தவர்களின் இன்றைய கதி - புலம்பும் தயாசிறி
you may like this video
நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை