வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கை! பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Social Media
By Mayuri Oct 09, 2026 11:02 AM GMT
Report

இலங்கை கணினி அவசர கால பதிலளிப்பு மையம் (Sri Lanka CERT) பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

அதன்படி சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கை விளம்பரங்களில் ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி விளம்பரங்கள்

இது தொடர்பாக இலங்கை கணினி அவசர கால பதிலளிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், இவ்வாறான போலி விளம்பரங்களை நம்பி ஏமாந்து, இலட்சக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சிலரிடமிருந்து தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இணைந்து கொள்வதன் மூலம் வெளிநாடுகளுக்கான விசா பெற முடியும் என்றும், சில ஆண்டுகள் பணிபுரிவதற்கான அனுமதியைப் பெற்றுப் பின்னர் குடியுரிமையைக் கூடப் பெற முடியும் என்றும் சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் பகிரப்பட்டு வருவதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கை! பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை | Warning Regarding Fake Foreign University Ad

இவற்றில் சில விளம்பரங்கள் முற்றிலும் மோசடியானவை என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளும்போது கவர்ச்சிகரமான தகவல்கள் வழங்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அப்போது, தாங்கள் உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் என அந்த மோசடியாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

பதிவுக் கட்டணம் மற்றும் முதலாம் கல்வியாண்டிற்கான கட்டணத்தை மட்டும் செலுத்தி பல்கலைக்கழகத்தில் இணைய முடியும் என்றும், அதன் பின்னர் பகுதிநேர வேலை தேடிக் கொண்டு தங்குமிடம் மற்றும் உணவிற்கான செலவுகளைச் சமாளித்துக் கொள்ள முடியும் என்றும் அவர்கள் கவர்ச்சியாகக் கூறுகின்றனர்.

மேலும், அடுத்தடுத்த கல்வியாண்டுகளுக்குக் கல்வி உதவித்தொகை (Scholarship) கூடப் பெற முடியும் என்றும் அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்றனர். இதனைத் தொடர்ந்து, மின்னஞ்சல் கோப்பு அல்லது வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் படங்கள், வீடியோக்கள் மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

தலைமறைவாகும் மோசடியாளர்கள்

இணையத்திலிருந்து திருடப்பட்ட அந்த வீடியோக்களும் படங்களும் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் மிக நுட்பமாக அவர்களால் முன்வைக்கப்படுகின்றன. மேலும், சேர்க்கைக்காக அவர்கள் அனுப்பும் ஆவணங்களும் உண்மையான பல்கலைக்கழக ஆவணங்களைப்போலவே அச்சிடப்பட்டிருக்கின்றன.

அதன் பின்னர், பணத்தை வைப்பு செய்வதற்காக வெளிநாட்டு வங்கி கணக்கு எண்களை வழங்கி, எந்தவொரு சந்தேகமும் எழாதவாறு சாத்தியமான அனைத்து வழிகளையும் அடைத்து விடுகின்றனர்.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கை! பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை | Warning Regarding Fake Foreign University Ad

இவற்றை நம்பி பதிவுக் கட்டணம் மற்றும் முதற்கட்டக் கட்டணமாக இலட்சக்கணக்கான ரூபாய்களைச் செலுத்திய பிறகு, அந்த மோசடியாளர்கள் தலைமறைவாகி விடுவதாக CERT மையம் தெரிவித்துள்ளது.

எனவே, இணையத்தில் வெளியாகும் இதுபோன்ற விளம்பரங்களில் ஏமாற வேண்டாம் என்றும், சட்டப்பூர்வமாகச் செயல்படும் பல்கலைக்கழகப் பிரதிநிதிகளை மட்டுமே தேர்வு செய்யுமாறும் இலங்கை CERT மையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், இவ்வாறான நபர்கள் வழங்கும் ஆவணங்களின் உண்மைத்தன்மை மற்றும் அவர்கள் வழங்கும் வங்கி கணக்கு எண்கள் குறித்து மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறும் இலங்கை CERT மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

களுத்துறையில் இன்று காலை துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி

களுத்துறையில் இன்று காலை துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி

விரட்டியடிக்கப்பட்ட ஷிரந்தி : நிலைகுலைந்து போகும் ராஜபக்சர்களின் அரசியல்

விரட்டியடிக்கப்பட்ட ஷிரந்தி : நிலைகுலைந்து போகும் ராஜபக்சர்களின் அரசியல்

மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில், தெஹிவளை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US