பல்வேறு உடல்நலப் பாதிப்புக்களால் அவதியுறும் ஷிரந்தி! நாட்டுக்கு சேவை செய்தவர்களின் இன்றைய கதி - புலம்பும் தயாசிறி
முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவுக்கு பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகள் இருப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்சவை நேற்றையதினம்(08.10.2026) சிறைக்குச் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உடல்நலப் பிரச்சினைகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ச மற்றும் ரோஹித போகொல்லாகம உள்ளிட்டோரை நான் சென்று சந்தித்தேன்.
இவர்கள் அனைவரும் நாட்டுக்கு சேவை செய்த மனிதர்கள். எதிர்காலத்தில் எமது நிலை என்னவென்று எமக்கு தெரியாது.

முன்னாள் அரசியல்வாதிகளைத் திருடர்களாக்கும் ஒரு வேலைத்திட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. கைது செய்யப்பட்டர்வகள் நாட்டிற்கு சேவை செய்த மனிதர்கள். எதிர்காலத்தில் இதற்கு எப்படி முகம்கொடுப்பது என்று பார்க்க வேண்டும்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள ரோஹித போகொல்லாகம மற்றும் ஷிரந்தி ஆகியோருக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் உள்ளன. அவர்களுக்கு சிகிச்சைகள் தேவை. என்ன நடக்கின்றது என்பதைப் பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.